ஆதரவாளர்கள் முற்றுகை - வேலுமணி ரெய்டு விவகாரத்தில் கடும் கோபத்தில் ஸ்டாலின் !
வேலுமணி தரப்பினருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
By : Mohan Raj
நேற்று முழுவதும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்கள், தொடர்புடையவர்கள் ஆகியோரது இடங்களில் சென்னை, கோவை திண்டுக்கல் உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது வேலுமணி ஆதரவாளர்கள் திரளாக கூடினர் இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தப்போவது எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
எப்போதுமே சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் தங்காத வேலுமணி, நேற்று அதிகாலையிலேயே விடுதிக்கு வந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே சோதனையை முன் கூட்டியே வேலுமணி தரப்பிடம் வெளிப்படுத்திய போலீசார் யார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு சீக்ரெட்டாக வைத்திருந்தும் வேலுமணி தரப்புக்கு இந்த விவகாரம் முன் கூட்டியே சென்றதால் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
மேலும் கோவையில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க வெற்றி பெற இயலாத நிலைக்கு தி.மு.க சென்றதற்கே இந்த பழிவாங்கல் எனவும் கூறப்படுகிறது.