கருணாநிதியே ஓரங்கட்டினோம்.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.வேலுமணி.!
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பொய் வழக்கு போடுவது வாடிக்கைதான் என கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை கருணாநிதியே அழிப்பதற்கு போராடி பார்த்து, எதுவும் செய்ய முடியாமல் ஒதுங்கினார்.

இரண்டு மாபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவை பொய் வழக்குகளால் அச்சுறுத்த முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சட்ட அலுவலகத்தை எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சி காலங்களில், அதிமுக கட்சி தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது. அப்போது அவர்களுக்கு அதிமுக வழக்கறிஞர் அணிதான் உறுதுணையாக இருந்தது.
மேலும், திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பொய் வழக்கு போடுவது வாடிக்கைதான் என கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை கருணாநிதியே அழிப்பதற்கு போராடி பார்த்து, எதுவும் செய்ய முடியாமல் ஒதுங்கினார்.
மக்கள் விருப்பப்பட்டு திமுக ஆட்சிக்கு வரவில்லை. போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக ஆட்சியை பிடித்தது எனக் கூறினார். அது மட்டுமின்றி அதிமுக ஆட்சியின்போது கோவை மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை திமுக அரசு முடக்க நினைத்தால், வெகுண்டெழுவோம் என கடுமையாக எச்சரித்துள்ளார்.