தி.மு.க'வின் அலட்சியம் குழந்தைகள் காய்ச்சலுக்கு காரணம் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் பல்வேறு காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு தி.மு.கவின் அலட்சியத் தன்மையை காரணம் என்று வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு.
By : Bharathi Latha
தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் அதிக வேகமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது குறித்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறுகையில், இந்த காய்ச்சலால் குழந்தைகள் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் போது அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகள் குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இது பெற்றோர் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள இந்த காய்ச்சல் பரவுவதற்கு கொசுக்கள் தொல்லையை முக்கிய காரணம். தமிழக முழுவதும் மழை நீர் வடிகால் சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய் சிறப்பு பணி என்ற பெயரில் நகரப் பகுதிகளில் கால்வாய்கள் தோண்டப்பட்டு பல மாதங்களாக பணிகள் முடிக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் தெருக்களில் நடக்க முடியாமலும் சாலைகளில் வாகனங்கள் ஊட்ட முடியாமலும் மக்கள் சிரமப்படுகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தால் இதன் காரணமாக அதன் மூலம் உருவாக்கும் கொசுக்கள் காரணமாக குழந்தைகளுக்கு அதிகமாக நோய் தொற்று பரவுகிறது.
மழைநீர் வடிகால் கழிவு நீர் வடிகால் பல மாதங்களாக மூடப்படாமல் இருப்பதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். வாய் பேச்சிலேயே 14 மாதங்களை கடந்துவிட்ட தி.மு.க ஆட்சியில் இன்னும் எத்தனை துயரங்களை அனுபவிக்க போகிறோமோ தெரியவில்லை. இவற்றை கண்டு உடனடியாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Input & Image courtesy: News