Kathir News
Begin typing your search above and press return to search.

"ஏன் நிதியமைச்சர் பி.டி.ஆர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போனார்" விளக்கம் கேட்டு ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் !

Breaking News.

ஏன் நிதியமைச்சர் பி.டி.ஆர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போனார் விளக்கம் கேட்டு ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Sept 2021 8:00 AM IST

தமிழக நிதியமைச்சர் ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு செல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றது ஏன் என கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "கடந்த 17-ந் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற 45'வது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெற வில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி. வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் தமிழ்நாட்டு நிதி அமைச்சர்? இதில் இருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.

பெட்ரோலிய பொருட்களில் உள்ள பல கட்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக தாங்கள் உரத்த குரலில் பேசியது மக்களால் வரவேற்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் வந்து அமர்ந்த பின்னர் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாற காரணம் சொல்லவேண்டிய தாங்களும், தங்கள் நிதி அமைச்சரும் பாராமுகமாக நடப்பது மக்களை வஞ்சிக்கும் செயல் என்பதை தங்களுக்கு அறிவுறுத்தவே தமிழக மக்கள் சார்பாக இக்கடிதம். ஒரு தவறை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையின் காரணமாக, ஒரு எதிர்க்கட்சியின் கடமையாக கருதி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற குறள் வழியில் தமிழக மக்கள் நலம் காக்க இக்கடிதம் எழுதியுள்ளேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Twitter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News