ஒரு தொண்டரைக் கூட ஸ்டாலினால் தொட முடியாது.. முதலமைச்சர் அதிரடி பேச்சு.!
ஒரு தொண்டரைக் கூட ஸ்டாலினால் தொட முடியாது.. முதலமைச்சர் அதிரடி பேச்சு.!

அதிமுகவை உடைக்க முடியாது என்றும் ஒரு தொண்டரைக் கூட திமுத தலைவர் மு.க.ஸ்டாலினால் தொட முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரை மட்டுமின்றி அறிக்கைகள் மூலமாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நற்று அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், அதிமுக 2ஆக உடையும் எனத் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று திருச்சியில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினின் அறிக்கைக்கு பதிலளித்தார்.
அதில், நாட்டுக்காக வாழ்ந்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. அதனை ஸ்டாலின் உடைக்கப் பார்க்கிறார். அதிமுக உடைந்துவிடும் என்று அவர் சொல்கிறார். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. ஒரு தொண்டரைக் கூட ஸ்டாலினால் தொட முடியாது என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.