வசமாக சிக்கிக்கொண்ட ஸ்டாலின்.. ட்விட்டரில் டிரெண்டிங் ஆன 100 நாள் நாடகம்.!
வசமாக சிக்கிக்கொண்ட ஸ்டாலின்.. ட்விட்டரில் டிரெண்டிங் ஆன 100 நாள் நாடகம்.!

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பல்வேறு வகையிலான நாடகங்களை நடத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற 100 நாள் பயண திட்டத்தை ஆரம்பித்துள்ளார். தற்போது இந்த 100 நாள் நாடகம் ட்விட்டரில் அதிமுகவினரால் டிரெண்டிங் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எப்படியும் ஆட்சியை பொய் சொல்லியாவது பிடித்துவிட வேண்டும் என்று திமுக திட்டம் போட்டு வருகிறது. அதில் பல நாடகங்களை நடத்தி விட்டார். ‘ஸ்டாலின் வருகிறார்.. விடியல் தருகிறார் என்று இதற்கு முன்னர் நடத்தினார். இதனை தொடர்ந்து தற்போது 100 நாட்கள் தமிழகம் முழுக்க சுற்றுபயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளேன் என கூறினார்.
அதற்காக திருவண்ணாமலையில் நடைபெற்ற 1வது நாளிலேயே உளற ஆரம்பித்தார் ஸ்டாலின். ஒருவர் கறவை மாடு காணாமல் போய்விட்டது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதனை அப்படியே மாற்றி கணவரை காணவில்லை என்று மனு எழுதியுள்ளார். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேடையில் பேசினார்.
இது அங்கிருந்த திமுகவினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. என்னடா நம்ம தலைவரு இப்படியா உளறி வைப்பது என்று கூட்டத்தில் வந்திருந்த அனைவரும் பேசிக்கொண்டனர். இந்நிலையில், #100நாள்நாடகம் என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த டிரெண்டிங்கை அதிமுக ஐடிவிங் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ட்விட்டரில் பல பதிவுகளை காணமுடிகிறது. அதாவது பக்கோடா வாங்க கொடுத்த பணத்தை திருடியதாக ஸ்டாலின் ஒப்புக் கொண்டுள்ளார். செய்த தவறை ஒப்புக்கொண்டே ஒரே தலைவர் அவர் தான் என ஒருவர் பதிவிட்டார். மற்றொருவர் ஊழல் ஆரம்பித்ததே பக்கோடாவில் இருந்துதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஆரம்பத்திலேயே இவ்வளவு உளறி கொட்டுகிறார் என்றால் எப்படி இவர் தமிழகத்தில் முதலமைச்சரா வந்து மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் எனவும் பொதுமக்கள் பேசி வருகின்றனர்.