"தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை" என கூறி தி.மு.க வினரையை குழப்பிய ஸ்டாலின்!
"தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை" என கூறி தி.மு.க வினரையை குழப்பிய ஸ்டாலின்!

ஒரு கட்சி தான் ஆட்சிக்கு வருவதற்கு நல்ல திட்டங்கள், மக்களின் வாழ்க்கை தரம் உயர வழிவகைகள், விவசாய வாழ்வாதார பிரச்சினைகள், உள்கட்டமைப்பு போன்ற அனைத்தையும் மக்களிடத்தில் கூறி வாக்குகளை சேகரிக்கும்.
ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலினோ என்ன சொல்லி ஓட்டு கேட்பது என குழம்பி நிற்கிறார் என அவ்வபோது அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். அதனை உண்மையாக்கும் வகையில் ஸ்டாலினும் அவ்வபோது ஓட்டு சேகரிக்க கூற வலிமையான காரணங்கள் இன்றி குழம்பி வருவது அவரது பேச்சில் தெரிகிறது.
ஆளும் மத்திய, மாநில அரசுகளை குறை மட்டுமே சொல்வது, சிறுபான்மையினரை பயமுறுத்தி வாக்கு சேகரிப்பது, விவசாயிகளை குழப்பி அதில் ஏற்படும் அதிருப்தியில் வாக்குகளை சேகரிப்பது, கோடிகளில் செலவு செய்து வாக்குகளை சேகரிப்பது என செய்து வருகிறார்.
இந்த நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்கு காரணமாணவர்களை கண்டுபிடிப்பேன் என ஸ்டாலின் இன்று கூறியுள்ளது தி.மு.க'வினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மாரண்ட அள்ளி அருகே தூள்செட்டி ஏரி பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் தினமும் மக்களிடம் மருத்துவ அறிக்கையை தெரிவிப்பார்கள். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இட்லி சாப்பிட்டார் ஜூஸ் குடித்தார் என்று அனைத்து அமைச்சர்களும் பொய் கூறினார்கள்" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையில் இருந்து தப்பித்தார். சிறைக்கு செல்ல இருந்த சசிகலா வின் காலில் விழுந்த காரணத்தால்தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார்.
பதவியை இழந்த பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரினார். நான்கு வருடங்களாக இதுவரை விசாரணையில் எந்த முடிவும் இல்லை. சம்மன் அனுப்பியும் பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா வின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவேன்" என வாக்குறுதி அளித்தார்.
நாட்டில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த நிறைய காரணங்கள் இருக்கும் போது பதவி வெறியில் என்ன சொல்லி வாக்கு கேட்பது என தெரியாமல் விழிக்கறார் ஸ்டாலின் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.