சட்டசபையில் ஸ்டாலின் போல சட்டையை கிழித்துக் கொண்டு நாடகம் போடமாட்டோம்.. செல்லூர் ராஜூ.!
சட்டசபையில் ஸ்டாலின் போன்று சட்டையை கிழித்துக் கொண்டு நாடகம் போடாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். அதே போன்று வீர வசனம் பேசிவிட்டு டெல்லி சென்று என்ன சாதித்தார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

சட்டசபையில் ஸ்டாலின் போன்று சட்டையை கிழித்துக் கொண்டு நாடகம் போடாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். அதே போன்று வீர வசனம் பேசிவிட்டு டெல்லி சென்று என்ன சாதித்தார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு ஏற்படுகின்ற அனைத்து பாதிப்புகளும் திமுக அரசால் இருக்கும்போதுதான் நடைபெறுகிறது. அது கச்சத்தீவு, ஸ்டெர்லைட், முல்லை பெரியாறு, காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைக்கும் காரணம் திமுக தான். வீர வசனம் பேசிக்கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றார் முதலமைச்ச ஸ்டாலின். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.
திமுக ஆட்சி அமைத்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறினார். ஆனால், நீட் தேர்வுக்கு மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பொதுமக்களிடம் பொய் சொல்லிவிட்டு ஆட்சிக்கு வரும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். இனறு உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று சொல்கிறார் ஸ்டாலின். ஆனால், அதிமுக மட்டும்தான் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மத்திய அரசுடன் போராடி உள்ளது.
மேலும், அதிமுக ஆட்சியில் ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், திமுக இதுவரை எத்தனை கடைகளை அடைத்துள்ளது? உள்ளாட்சி தேர்தல் வரை மட்டுமே திமுக கூட்டணி நீடிக்கும். அதன் பின்னர் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பலர் பிரிந்து சென்றுவிடுவார்கள்.
அது மட்டுமின்றி சட்டசபையில் ஸ்டாலின் போன்று சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்து நாடகம் ஆட மாட்டோம். எங்களுடைய பணிகள் சட்டசபையில் ஆக்கப்பூர்வமாக மக்களுக்காக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.