Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினுக்கு அளவிட முடியாத மனவேதனை.. பா.ஜ., தலைவர் மன்னிப்பு கேட்கனும்.. தி.மு.க., எம்.பி.,யின் வித்தியாசமான அறிக்கை.!

ஸ்டாலினுக்கு அளவிட முடியாத மனவேதனை.. பா.ஜ., தலைவர் மன்னிப்பு கேட்கனும்.. தி.மு.க., எம்.பி.,யின் வித்தியாசமான அறிக்கை.!

ஸ்டாலினுக்கு அளவிட முடியாத மனவேதனை.. பா.ஜ., தலைவர் மன்னிப்பு கேட்கனும்.. தி.மு.க., எம்.பி.,யின் வித்தியாசமான அறிக்கை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Dec 2020 3:57 PM IST

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவதூறாக பேசியதாகவும், அதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளவிட முடியாத மன வேதனையும் துயரமும் அடைந்துள்ளார் என்றும் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கூறியுள்ளார்.

அவதூறு பிரச்சாரம் செய்ததால் முருகன் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் ஒரு கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்று அறிக்கை விட்ட சம்பவம் அனைவரைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். திமுகவினர் விடாத பொய் பிரச்சாரமா அல்லது அவர் தலைவர் வாய்க்கு வந்ததை அறிக்கையாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொள்வார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை முடித்து வைத்து 28.12.2020 அன்று பேசியபோது அவதூறான அறிக்கையை வெளியிட்டுள்ளீர்கள். சமூக நீதி குறித்துப் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது. திமுகவினர் எப்படி பட்டியல் இன மக்களை அவமானப்படுத்தி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவின் முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் மூலப்பத்திரம் பற்றி பேசக்கூடாது என்று நினைத்திருந்தேன்.

நான் எஸ்.சி. கமிஷனில் துணைத்தலைவராக இருந்தபோதே மூலப்பத்திரம் பற்றிய புகாரை நான் விசாரிக்க கூடாது என்று திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஸ்டாலின் அந்த மூலப்பத்திரத்தை ஏன் அதை கொடுக்க மறுக்கிறீர்கள்? தைரியம் இருந்தால் அதை காட்டி விட்டுப் போகலாமே? மூலப் பத்திரத்தை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இல்லையேல் பட்டியலின மக்கள் தக்க நேரத்தில் தக்க பதில் தருவார்கள் என்ற அறிக்கையை தாங்கள் யோசனையின்றி எங்கள் கட்சிக்காரர் மீது கூறியிருக்கிறீர்கள்.

தாங்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் நலவாரியத்தில் துணைத் தலைவராக செயல்படுகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் உங்கள் அவதூறு அறிக்கை எல்லைக்குள் இருந்துள்ளீர்கள். தாங்கள் தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக ஆனபிறகு எங்கள் கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட நீதிமன்ற எல்லைக்குள் உள்ளன.

அவதூறு வழக்கை பாஜக மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சீனிவாசன் மீது எழும்பூர் 14-வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது. இது தொடர்பான மூலப் பத்திரங்கள் மேலே குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது தங்கள் அவதூறு அறிக்கை உண்மையல்ல அடிப்படையற்றது என்று எங்கள் கட்சிக்காரர் கூறுகிறார். மேலே குறிப்பிட்ட அவர் அறிக்கையிலும் அவதூறு கட்டுரையிலும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. கருத்துக்கள் தவறானவை உண்மை அற்றது. தங்களுடைய நடவடிக்கைகள் கடுமையான சீர்செய்ய முடியாத சாபத்தையும் இழப்பையும் எங்கள் கட்சிக்காரருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே தாங்கள் இழப்பீடு அளிக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள். அது ஒரு அறிக்கையின் காரணமாக எங்கள் கட்சிக்காரர் அளவிட முடியாத மன வேதனையும் துயரமும் அடைந்துள்ளார். அதனால் அவதூறு அறிக்கை அறிக்கையை நோட்டீஸ் தரப்பட்ட 48 மணி நேரத்திற்குள் திரும்பப் பெற வேண்டும். வெளிப்படையான நிபந்தனையற்ற மன்னிப்பை எங்கள் கட்சிக்காரரிடம் கேட்க வேண்டும். மேலும் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் ஈடுபடக்கூடாது.

அப்படி தவறினால் எங்கள் கட்சிக்காரர், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி உரிய குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்க நேரிடும். அதன்மூலம் ஏற்படும் அனைத்து செலவுகளுக்கும் விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பாளர்கள் என்பதை தெரியப்படுத்துகிறேன் என குறுப்பிட்டுள்ளார்.

இவரது அறிக்கை அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டார். அவர் மீது திமுகவினர் வழக்கு போட்டுருக்கலாமே. ஏன் போட வில்லை. இவர்களிடம் மூலப்பத்திரம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால் இப்படி ஒரு அறிக்கையை பாஜக தலைவருக்கு எதிராக தற்போது ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ளார் என்று அனைத்து கட்சியினரும் அறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News