"கனிமொழி வளர்ந்துவிடுவார் என ஸ்டாலின் பயப்படுகிறார்" - பகீரங்கமாக போட்டு உடைத்த ஜெயக்குமார்
"கனிமொழி வளர்ந்துவிடுவார் என ஸ்டாலின் பயப்படுகிறார்" - பகீரங்கமாக போட்டு உடைத்த ஜெயக்குமார்
By : Mohan Raj
தி.மு.க'வில் உள்ள கனிமொழி, துரைமுருகன் வளர்ந்துவிடுவார்கள் என்பதால் ஸ்டாலின் கட்சி பதாகைகளில் மற்றவர்கள் படத்தை போடக்கூடாது என்கிறார் என பகீரங்கமாக போட்டு உடைத்துள்ளார் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்.
சென்னை மந்தைவெளியில் அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை கூறி அரசியலுக்கு வருவதை தவிர்த்து உள்ளார். எனவே இன்று போல் என்றும் அவர் வாழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் வராமல் சென்றாலும் அ.தி.மு.க'விற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ரஜினி ரசிகர் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களிப்பார்கள்" என்றார்.
மேலும் தி.மு.க'வை பற்றி பேசிய அவர், "வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க'வுக்கு பெரிய பாதிப்பு இருக்கும். அ.தி.மு.க'வை பார்த்து ஸ்டாலின் சொல்கிறார் கட்சி உடைந்து விடும் என்று, இது என்ன மண் சட்டியா உடைவதற்கு. அ.தி.மு.க என்பது எஃகு கோட்டை. இதை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. தி.மு.க'வில் உட்கட்சி பூசல் உச்சம் பெற்றுள்ளது" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "அ.தி.மு.க'வில் தொண்டர்கள் கூட முதல்வர் ஆகலாம் என்ற நிலை உள்ள நிலையில் தி.மு.க'வில் ஒரு சிலரின் புகைப்படங்கள் மட்டுமே கட்சி போஸ்டரில் இடம் பெறவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார் ஸ்டாலின். இதற்கு காரணம் தி.மு.க'வில் உள்ள மூத்த தலைவர்கள் துரைமுருகன், கனிமொழி ஆகியோர் வளர்ந்து விடுவார்கள் என்பதால்தான் இந்த முடிவை அவர் எடுத்து உள்ளார்" என பகீரங்கமாக தி.மு.க'வை பற்றி போட்டு உடைத்துள்ளார்.