Kathir News
Begin typing your search above and press return to search.

"ஸ்டாலின்தான் வாராரு! மற்ற கட்சி ஆட்களை தூக்க போறாரு!" என ஆள் தூக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிய தி.மு.க!

"ஸ்டாலின்தான் வாராரு! மற்ற கட்சி ஆட்களை தூக்க போறாரு!" என ஆள் தூக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிய தி.மு.க!

ஸ்டாலின்தான் வாராரு! மற்ற கட்சி ஆட்களை தூக்க போறாரு! என ஆள் தூக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிய தி.மு.க!

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jan 2021 5:00 PM GMT

கட்சியின் வளர்ச்சி தாமாக இணையும் தொண்டர்களை பொறுத்து இருக்க வேண்டும், ஆனால் மற்ற கட்சிகளில் யார் அதிருப்தியாக இருக்கிறார்கள் என குறித்து வைத்து அவர்களை தொடர்ச்சியாக தொடர்புகொண்டு பின் அவர்களை கட்சிக்குள் இழுத்து "பார்த்தீர்களா அனைத்து கட்சியினருக்கும் மாற்று தீர்வு எங்கள் கட்சி மட்டுமே" என அரசியல் தொண்டர்கள் மத்தியிலும் வாக்களிகும் மக்களின் மத்தியிலும் பறைசாற்ற துடியாய் துடிக்கும் ஒரே கட்சி தமிழகத்தில் தி.மு.க மட்டுமே.

அந்த வகையில் சமீபத்தில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் பிரவேசம் இல்லை என அறிவித்த பிறகு மாவட்ட செயலாளர்கள் உட்பட மூன்று முக்கிய நிர்வாகிகளை தி.மு.க'விற்கு இழுத்தனர். மேலும் நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இராமநாதபுரம் மாவட்டம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி, மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சு.அமர்நாத், வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் மு.இரமேஷ், திருவாடானை தொகுதி பொருளாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் தி.மு.க'வில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில் "தோழர் @rajivgandhilaw நீண்ட நாட்களாக நமது தி.மு.க இயக்கத்திற்கு வருமாறு அழைத்ததன் அடிப்படையில்

@Udhaystalin இளைஞர் அணி செயலாளரிடம் கலந்தாலோசித்து

கழக தலைவர் @mkstalin முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்து கொண்டார்

உடன் இராமநாதபுரம் மா.பொறுப்பாளர் திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம்" என குறிபிட்டுள்ளார்.

அதாவது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜிவ் காந்தியை நீண்ட நாட்களாக தி.மு.க'விற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனை எம்.பி.செந்தில்குமார் அவர்களே தனது ட்விட்டர் பதிவில் ஒப்புக்கொண்டுள்ளார். ஏனெனில் தி.மு.க'வினர் தாங்களாக யாரையும் போய் அழைக்கவில்லை என கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆனால் எம்.பி.செந்தில்குமார் அவர்களே இப்படி கூறிய பிறகு இனி அப்படியும் கூற முடியாது.

தி.மு.க'வின் வரலாறு படி மற்ற கட்சிகள் வளர்கிறது என்றால் அதனை இணைத்து வளராமல் செய்வது. அல்லது அதில் களமாடும் ஆட்களை இழுத்து அதன் வளர்ச்சியை தடுப்பது. இதற்கு ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, ரஜினி மக்கள் மன்றம் என பல வரலாற்று நிகழ்வுகள் ஆதாரங்களாக விளங்குகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News