Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களிடத்தில் எடுபடாது போன தி.மு.கவின் நாடக பிரச்சாரங்கள்! மீண்டும் இந்தி எதிர்ப்பு நாடகத்தை தூக்கிய ஸ்டாலின்!

மக்களிடத்தில் எடுபடாது போன தி.மு.கவின் நாடக பிரச்சாரங்கள்! மீண்டும் இந்தி எதிர்ப்பு நாடகத்தை தூக்கிய ஸ்டாலின்!

மக்களிடத்தில் எடுபடாது போன தி.மு.கவின் நாடக பிரச்சாரங்கள்! மீண்டும் இந்தி எதிர்ப்பு நாடகத்தை தூக்கிய ஸ்டாலின்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Feb 2021 8:02 AM GMT

பிரச்சாரங்கள் அனைத்தும் மக்களிடத்தில் எடுபடாது போன நிலையில் மீண்டும் பரபரப்பிற்காக தி.மு.கவின் பழைய நாடகமான இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரச்சாரத்தை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து, தேர்ச்சி அடைந்தால் மட்டுமே, 6ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்பிற்குச் செல்ல முடியும்” என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

“சமஸ்கிருதத்திற்குப் பதில், தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது” என்று வெளிவந்துள்ள இன்னொரு தகவல் பேரதிர்ச்சியளிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் வாழும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை பின்னுக்குத்தள்ளி - வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்கும் மத்திய அரசின் தாய்மொழி விரோத நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "தமிழர்களுக்கும் - அன்னைத் தமிழ்மொழிக்கும் செய்யும் துரோகத்தை உணர்ந்து - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டங்கள் மக்களிடத்தில் எடுபடவில்லை, இந்துக்களை கவர வேல் தூக்கியது மக்களை முகம் சுழிக்க வைத்தது, புகார் பெட்டி என நாடக பிரச்சாரம் செய்தது மக்களிடத்தில் இது ஒரு புதுமையா என வெறுப்பை வரவழைத்தது, மேலும் தமிழக முதல்வர் எடப்பாடியார் விவசாய கடன் ரத்து, பொங்கல் பரிசு, டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தல் இது போன்ற அறிவிப்புகளால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

அதிலும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கட்டபஞ்சாயத்து, கந்துவட்டி கொடுமைகள் நிறைய உலா வரும் என மக்களுக்கு தெரிந்துள்ளது. எனவே தி.மு.க'வின் பணத்தை தண்ணீராக செலவழித்து செய்யும் பிரச்சாரங்கள் பொய்த்து போன நிலையில் தி.மு.க'வின் பழைய நாடகமான இந்தி எதிர்ப்பை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News