"டெல்லி கலவரத்திற்கும் எடப்பாடி அரசே காரணம்" - வன்முறையிலும் அரசியல் லாபம் பார்க்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்!
"டெல்லி கலவரத்திற்கும் எடப்பாடி அரசே காரணம்" - வன்முறையிலும் அரசியல் லாபம் பார்க்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்!

அரசியல் தலைவர்கள் வன்முறை பற்றிய கருத்துக்களை யாருக்கும் சாதக, பாதக இன்றி கூற வேண்டும். மாறாக அந்த வன்முறை ஏற்பட்டதையும் தனது அரசியல் நிலைப்பாட்டிற்காகவும், லாபத்திற்காகவும் மாற்றி கூறுவது நடந்த வன்முறையை தனது அரசியல் லாபத்திற்காக உபயோகப்படுத்துவது போலாகும்.
அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வன்முறை சம்பவத்திற்கு கண்டனமோ, கருத்தோ தெரிவிக்காமல் அதற்கு அ.தி.மு.க அரசின் மீது பழி போட்டு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அரசியல் லாபம் பார்க்க முயன்றது. கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நேற்று குடியரசு தின கொண்டாட்டங்களை சிதைக்கும் நோக்குடனும், உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைக்க வேண்டும் என்ற நோக்குடனும் விவசாயிகள் போர்வையில் டெல்லியில் கலவரக்காரர்கள் வன்முறையை கட்டவிழ்த்தனர். விவசாய மசோதா எதிர்ப்பு என்னும் பெயரில் டெல்லி செங்கோட்டையில் உள்ள பாரத கொடியை வீழ்த்தினர். இப்படி தீவிரவாத செயலை அதுவும் குடியரசு நாள் அன்று வன்முறைவாதிகளால் அசிங்கப்படுத்த முயற்சி செய்யப்பட்ட சம்பவத்தை பற்றி அனைத்து தலைவர்களும் கருத்து கூறி வந்த நிலையில் அதில் எப்படி தமிழக அரசியல் சூழ்நிலைக்கேற்ப மாற்றி லாபம் பார்க்கலாம் என்ற நினைப்போடு தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஓர் ட்விட்டர் பதிவு வெளியிட்டார்.
அதில், "மத்திய அரசின் அணுகுமுறையே தில்லியில் விவசாயிகளின் போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அ.தி.மு.க ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது! வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்! ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்" என
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது அவரின் வழக்கமான கூற்றான "இதற்கு எடப்பாடி அரசே காரணம்" எனும் அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசிய கொடி காத்த குமரன் பிறந்த வரலாறு உடைய தமிகத்தின் முதல்வராக ஆசைப்படும் ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்த சம்பவத்தை கூட தனது அரசியல் லாபத்திற்காக மாற்ற முயன்ற நிகழ்வு கண்டிப்பாக தி.மு.க வரலாற்றில் கரும்புள்ளி என்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.