"என் வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தியதே ஸ்டாலின் தான்" - பகீரங்கமாக குற்றம் சாட்டிய குஷ்பு!
"என் வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தியதே ஸ்டாலின் தான்" - பகீரங்கமாக குற்றம் சாட்டிய குஷ்பு!
By : Mohan Raj
"என் வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தியதே ஸ்டாலினின் ஆட்கள்தான்" என நடந்த வரலாற்றை பகீரங்கமாக தெரியப்படுத்தியுள்ளார் நடிகை குஷ்பு.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்சி அருமனை புண்ணியத்தில் இருந்து ஊர்வலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு, "இந்தி மொழி படிக்க எதிர்ப்பு தெரிவித்து விட்டு தி.மு.க'வினர் தங்கள் பிள்ளைகளை ஹிந்தி மொழிபடிக்க வைக்கின்றனர். அது போல் டெல்லி அரசியலுக்கு செல்லவும் ஹிந்தி மொழி தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். மகளிருக்கு தி.மு.க'வில் பாதுகாப்பு இல்லை, எனது வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் போது கல்வீசி தாக்குதல் நடந்தது. அப்போது நான் ஸ்டாலினிடம் பாதுகாப்பு கேட்டு சென்ற நேரத்தில், அவர் சாப்பிட்டு கொண்டு இருப்பதாக அவரது உதவியாளர்கள் கூறினார்.
நான் அங்கு ஸ்டாலினுக்காக காத்திருந்த நேரத்தில் தான் தாக்குதல் நடத்தியதே ஸ்டாலின்தான் என்று தெரியவந்து. அதனால்தான் நான் தி.மு.க'வைவிட்டு வெளியேறினேன்" என கூறினார்.
தி.மு.க'வில் இருந்து குஷ்பு விலகியதற்கு கிட்டதட்ட ஸ்டாலின் தான் காரணமே என்ற ரீதியில் குஷ்பு கூறியுள்ளதற்கு அரசியல் உலகில் பல கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.