Kathir News
Begin typing your search above and press return to search.

"தடை போட்டால் அதை உடைப்போம்" என ஸ்டாலின் ஆணவ பேச்சு!

"தடை போட்டால் அதை உடைப்போம்" என ஸ்டாலின் ஆணவ பேச்சு!

தடை போட்டால் அதை உடைப்போம் என ஸ்டாலின் ஆணவ பேச்சு!

Mohan RajBy : Mohan Raj

  |  30 Dec 2020 6:30 AM GMT

"அ.தி.மு.க அரசு தடை போட்டால் அதை நாங்கள் உடைப்போம்" என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். இன்று ராணிப்பேட்டை, அனந்தலை ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க கூட்டம் நடைபெற்றது.

அதில் ஸ்டாலின் பேசியதாவது, "அ.தி.மு.க'வில் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அக்கட்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ஆனால், அ.தி.மு.க கூட்டணி கட்சிகளில் சிலர் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தலைமை தான் முடிவு செய்யும் என்றும் ஜேபி நட்டா தான் அறிவிப்பார் எனவும் ஒருபக்கம் கூறப்பட்டு வருகிறது. இங்க ஓ.பி.எஸ் எப்பொழுது பிரிந்து செல்வார் என்று தெரியாது. ஆனால் சென்றுவிடுவார்" என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் கூடுவதை பார்த்து அஞ்சி தடை போடுகிறது அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து துறைகளும் மோசமான நிலையில் உள்ளன. பெண்ணாக இருந்தாலும் தைரியமானவர் என்பதால் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

தேர்தலுக்காகவே ரூ.2,500 பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்குகிறது. பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் தான் வழங்க வேண்டும். தி.மு.க நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தை பார்த்து ஆடிப்போயுள்ளனர். அவர்கள் என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள்" என பேசியுள்ளார்.

ஏற்கனவே கொரோனோ பரவல் காரணமாக கூட்டங்களுக்கு அரசு தடை விதித்து வந்த நிலையில் ஸ்டாலின் தடையை மீறி தனது அரசியல் காரணங்களுக்காக கூட்டத்தை கூட்டி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News