"நான் விவாதத்திற்கு தயார் ஆனால் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்" - விவாதத்தில் இருந்து தப்பிக்க ஸ்டாலின் போட்ட ஐடியா!
"நான் விவாதத்திற்கு தயார் ஆனால் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்" - விவாதத்தில் இருந்து தப்பிக்க ஸ்டாலின் போட்ட ஐடியா!
By : Mohan Raj
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் தி.மு.க சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்டாலின் கூறியதாவது, "தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்த தொல்லைகளுக்கு முடிவுகட்ட தயாராகிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதி. அந்த ஆட்சி மாற்றத்தை தரப்போகும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது முக்கியமாகும்" என்றார்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் ரூ.4000 கோடி ஊழல் நடந்து இருப்பதையும், அந்தப்பணம் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்து தி.மு.க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சி.பி.ஐ வழக்குக்கு பரிந்துரை செய்தது. தைரியம் இருந்தால் அந்த வழக்கை சந்தித்து இருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கினார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் இப்போது நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் தயார்தான். நான் சொல்லும் இடத்தில் கூட வேண்டாம் நீங்கள் சொல்லும் இடத்திற்கு கூட இப்போதே வருகிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கி விட்டு வாருங்கள். ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதை பற்றி விசாரிக்கக் கூடாது" என்றார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
எப்படியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழக்கை வாபஸ் பெற மாட்டார் எனவே விவாதத்திற்கு தயார் என கூறலாம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.