Kathir News
Begin typing your search above and press return to search.

'ஸ்டாலினின் அற்பத்தனமான அரசியல்' - தி.மு.க'விற்கு அரசியல் வகுப்பெடுத்த அண்ணாமலை!

'முதல்வர் ஸ்டாலினின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்' என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் அற்பத்தனமான அரசியல் - தி.மு.கவிற்கு அரசியல் வகுப்பெடுத்த அண்ணாமலை!

Mohan RajBy : Mohan Raj

  |  27 May 2022 7:30 AM GMT

'முதல்வர் ஸ்டாலினின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்' என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் தமிழக மக்களுக்காக 31,400 கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சி திட்டப்பணிகளை அர்பணிப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

மக்களுக்கான நலத்திட்ட நிகழ்ச்சியான இதை முதல்வர் ஸ்டாலின் அரசியல் நிகழ்ச்சியாக மாற்றினார், இதனை கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது, 'இந்தியாவின் சாதாரண குடிமகனாகவும், பெருமைமிக்க தமிழனாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தையைக் கண்டு வெட்கப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க நிகழ்ச்சிக்கு வரவில்லை அவர் பிரதமராக அரசு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தினார், ஆனால் 1974-ஆம் ஆண்டு தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தான் கச்சத்தீவு இலங்கைக்கு பரிசாக அளிக்கப்பட்டது, மறந்துவிட்டார்! திடீரென தற்போது விழிப்பு வந்தது ஏன்?

ஜி.எஸ்.டி விவகாரத்தைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்கிறது, இழப்பீட்டுத் தொகை ஜூலைக்கு பிறகு தான் வழங்கப்படும் இதில் எந்த பிரச்சினையும் இல்லை. முதல்வர் கூட்டாட்சி குறித்து பேசுகிறார், ஆனால் கூட்டாட்சி உதாரணமாகத் திகழும் ஜி.எஸ்.டி கவுன்சில் இழிவுபடுத்துகிறார் நிலுவைத் தொகை வழங்கப்படுகிறது, முதல்வர் தன் விருப்பத்தை மட்டும் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த கருத்து என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை ஜி.எஸ்.டி வருவாய் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது தமிழகமும் பயன்படும் பயன் அடைந்துள்ளது, ஆனால் தி.மு.க உண்மையை அறிவதில் ஆர்வம் காட்டவில்லை! அரசியல் செய்வதில் மட்டுமே ஆர்வம். பிரதமர் மோடிக்கு தமிழ் மீது தனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தினார்.

பல இடங்களில் பலமுறை வெளிப்படுத்தியுள்ள இதற்கு மேல் அவர்களிடம் பதில் இருக்காது என நம்புகிறேன் அவர் இவ்விஷயத்தில் அற்பத்தனமான அரசியல் மட்டுமே செய்கிறார்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News