Kathir News
Begin typing your search above and press return to search.

2020ம் ஆண்டு ஸ்டாலினின் டாப் 10 காமெடிகள் / உளறல்கள்

2020ம் ஆண்டு ஸ்டாலினின் டாப் 10 காமெடிகள் / உளறல்கள்

2020ம் ஆண்டு ஸ்டாலினின் டாப் 10 காமெடிகள் / உளறல்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  31 Dec 2020 4:22 PM GMT

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் கடந்த 2020'ம் வருட சறுக்கல்கள் / காமெடிகளை பட்டியலிட்டால் எண்ணிலடங்காதவை அதில் இங்கு பத்து முக்கியமான விஷயங்களை / உளறல்களை இங்கே காணலாம். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய தருணங்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின் காமெடி தருணங்களாக்கிய நிகழ்வுகள்.

* ஏழுவர் விடுதலையில் கருத்து சொல்ல ஆசைப்பட்டு "பேரறிவாளனை மனிதாபிமானமற்ற முறையில் கவர்னர் விடுதலை செய்ய வேண்டும்" என கூறி உடன் இருந்த உடன்பிறப்புகளையே சற்று உதற வைத்த பெருமை தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாரும்.

* கோடை காலத்தில் வறட்சியான இடங்களுக்கு லாரியில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்வதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், "மக்களுக்கு தண்ணீர் தரக்கூடிய விநியோகத்தை தொடங்கி வைக்கிறார்! ஏன் தண்ணீரில் கொண்டு வந்து லாரி குடுக்கனும்" என வார்த்தைகளின் மீது தண்ணீர் லாரியை ஏற்றியது வரலாறு.

* சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் வேறு இடம் மாற்றுவது தொடர்பாக கருத்து சொல்ல விழைந்து கடைசியில், "சேலம் செவ்வாய்பேட்டை லாரி மேர்க்ட்டு வேற இடம் மாற்ற சொல்ல... நிறைவேற்றி... கேரிக்கை... கோரிக்கை வச்சாங்களே.." என ஒருவழியாக முடித்ததில் அதை கேட்ட உடன்பிறப்புகளுக்கு உயிர் போய் உயிர் வந்தது.

* பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவிற்கு சென்று அவரின் தியாகத்தை கூறுகிறேன் என்ற பெயரில் "தேவர் இனத்தை குற்றப்பத்திரிகை'யில் இருந்து நீக்கிட போராடியவர்" என கூறி முடித்து தேவர் சமுதாயத்தை குற்றப்பத்திரிக்கையில் ஏற்றி வைத்து அழகு பார்த்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

* தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் ஸ்டாலின் பேசியது உளறலில் கொடுமை. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து பேசும் வேளையில் "2011, 2012'ம் ஆண்டு தமிழகத்தில் 'தானே' புயல் தாக்கியதில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு 5249 கோடி ரூபாய் கேட்டதற்கு மத்திய பா.ஜ.க அரசு குடுத்தது 500 கோடி மட்டுமே என ஆவேசமாக பேசினார். ஆனால் உண்மையில் 2011, 2012'ம் ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தது வரலாறு. இதனால் தலையை பிய்த்து கொண்டனர் உடன்பிறப்புகள்.

* கடலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க தலைவர் அ.தி.மு.க அரசை குறை சொல்கிறேன் என பெயரில் "அந்த வெள்ள சேதப்பகுதிகள்" என்பதற்கு முயன்று "அந்த வெள்ள சேதி... வெள்ள தேசி... வெள்ள தேசப்பகுதி... வெள்ள சேது.." என வெள்ளத்தில் அடித்து சொல்பவர் கத்துவது போல் பேசியது உடன்பிறப்புகள் மத்தியில் 'எங்களுக்கு நிவாரணமே வேண்டாம்' என நினைக்கும் அளவிற்கு உளறி கொட்டினார்.

* தமிழகம் மீட்போம் என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் சென்னை மேயராக இருந்த பெருமையை கூற ஆசைப்பட்டு "சிங்கார சென்னை" என கூறுவதற்கு பதிலாக "சென்னையை சின்னையா.... சிங்கி...சிங்கார சின்னை...சிரு......சிங்கார சென்னையாக ஆக்க வேணுடும்" என ஒருவழியாக கூறி முடித்தார். பின்னணி'யில் கருணாநிதி விளம்பர பேனரில் சிரித்துகொண்டிருந்தார்.

* தி.மு.க சார்பில் விவசாயம் காப்போம் என்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் "அரசு "நெல்...
முதல்...
கொள்..
கொள் முதல்...
நெல் முதல்...
நெல் கொள்..
நெல்லை வந்து கொல்..
கொள் நெல்.."
என "நெல் கொள் முதல்" என்ற வார்த்தையை கடித்து துப்பினார். தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என கூற விழைந்து 2 நிமிடம் பேச வேண்டிய கருத்தை கால் மணி நேரம் பேசியது வரலாறு நடந்தது அக்டோபர்'2020.

* தமிழகம் மீட்போம் என்ற தி.மு.க நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஸ்டாலின் உளறியதாவது, "இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் கட்டத்தை 1975'ம் தொடங்கி வைத்தவர் புலித்தேவன் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறிகின்றனர்" என்றார். திருநெல்வேலி பகுதி மக்களை பேசி மனம் மயக்குகிறேன் என்று ஸ்டாலின் தடுமாறி தலைகுப்புற விழுந்த மாதம் நவம்பர் 2020.

* டிசம்பரில் தி.மு.க சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் காணொளி கூட்டத்தில்
"'அமைச்சர் வேலுமணி' என கூறுவதற்கு 'அமைச்சர் வேலுமதி' என்றார், "பள்ளி கல்வியை 'பல்லி கல்வி' என்றார், 'டெண்டர் சட்டம்' என்பதற்கு 'டொண்டர் சட்டம்' என்றார் சில இடங்களில் 'டிண்டர்' என்றார், 'கிரிமினல் கேபினட்' என்று சொல்ல நினைத்து 'கிரிவினல் கேவிட்' என்றார், 'கடல் நீர் குடிநீர்' என்பதற்கு 'கல் நீர் குடிநீர்' என ஒரே காணொளி கூட்டத்தில் பல உளறல்களை சகட்டு மேனிக்கு உளறித்தள்ளினார் இந்த முத்தமிழறிஞர் மகன்.

இது தவிர உலகமே கொரோனோ ஊரடங்கில் தனித்திருக்க "ஒன்றிணைவோம் வா" என மக்களை குழப்பியது, டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்யும் தொழிற்சாலைகளை வைத்துகொண்டு டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக போராடியது, "எல்லோரும் நம்முடன்" என்ற இணைய வழி உறுப்பினர்கள் சேர்க்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் வரை சேர்த்தது, 'நில அபகரிப்பு' சட்டம் இயற்ற காரணமாக இருந்துவிட்டு 'வீட்டு மனை பட்டா' கேட்டு போராடியது என தி.மு.க மற்றும் அதன் தலைவர் ஸ்டாலினின் 2020'ம் ஆண்டு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்வுகளாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News