'தமிழ், தமிழ் என நாடகம் போடுறதை விட்டுட்டு நாட்டையும், கட்சியையும் பாருங்கள் முதல்வரே!' - அசால்ட்டாக டீல் செய்த அண்ணாமலை
'தமிழ்நாட்டையும், உங்க ஆட்சியையும் கவனிங்கள் முதல்வரே' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

By : Mohan Raj
'தமிழ்நாட்டையும், உங்க ஆட்சியையும் கவனிங்கள் முதல்வரே' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்டாய இந்தி திணிப்பு இன்னோர் மொழிப்போர் என முதல்வர் ஸ்டாலின் திடீர் அரசியல் அறிக்கை விட்டு இருக்கிறார். முதல்வரின் தமிழ் மொழி மீதான கரிசனத்தை எண்ணி சிரிப்பதா, அலுவதா என தெரியவில்லை. எப்போதெல்லாம் தி.மு.க'வுக்கு மக்கள் மீது அதிருப்தி வருகிறதோ? எப்பொழுது எல்லாம் ஊடகங்கள் எல்லாம் கூட தி.மு.க ஆட்சி பற்றி பேசத் தொடங்குகின்றதோ அப்பொழுதெல்லாம் தி.மு.க மொழி பிரச்சனை குறித்து அறிக்கை விடுகிறது.
ஏதோ வடநாட்டிலிருந்து ஒரு தீய சக்தி தமிழை அழித்துவிட போவதாக அம்புலிமாமா கதை விட்டு ஏமாற்றி வருகிறார்கள். அதன் மூலம் அந்த காலத்தில் மக்களை அவர்கள் எளிதாக திசை திருப்ப முடிந்தது இந்த காலகட்டத்தில் இதுபோல் மக்களை எழுத்தாக ஏமாற்றி விட முடியாது.
முதல்வர் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை கோபாலபுரத்தின் குடும்ப கட்சியில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தன்னை யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் மக்களை, ஊடகத்தை திசை திருப்ப முதல்வர் முயற்சி செய்திருக்கிறார். மாண்புமிகு முதல்வர் அவர்களே அன்புடன் ஒரு ஆலோசனை தமிழக மக்கள் நீங்கள் தவறாக எடை போட வேண்டாம் அவர்களுக்கு தெளிவாக தெரியும் தமிழ் மொழியை அரசியலுக்காக யார் பயன்படுத்துகிறார்கள்? தமிழ் மொழியை யாரு காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என மக்கள் அறிவார்கள் தயவு செய்து கவலைக்கிடமாக இருக்கும் தங்கள் ஆட்சியையும், தமிழ்நாட்டை கொஞ்சம் கவனியுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
