துரைமுருகனுக்கு திடீர் உடல்நல பாதிப்பு.. மருத்துவமனையில் குவிந்த நிர்வாகிகள், தொண்டர்கள்.!
துரைமுருகனுக்கு திடீர் உடல்நல பாதிப்பு.. மருத்துவமனையில் குவிந்த நிர்வாகிகள், தொண்டர்கள்.!
By : Kathir Webdesk
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டுள்ள காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் துரைமுருகன், இவர் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். கட்சி நிகழ்ச்சிக்காக திருச்சிக்கு சென்றிருந்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த திமுக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பாக குவிய தொடங்கியுள்ளனர். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே வயது முதிர்வு காரணமாக அவர் வேலூர், சென்னை என்று இருந்து வந்தார். தற்போது தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் கட்சி தலைமை அவரை பிரச்சாரத்திற்கு செல்வதற்கு பிரசர் அளிப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் திருச்சிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.