Begin typing your search above and press return to search.
அரசியல் சாசனத்திற்கு எதிரானது: மகாராஷ்டிராவில் 12 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து.. உச்சநீதிமன்றம் அதிரடி!
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர் கேள்வி எழுப்பினர். அப்போது சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ், 12 உறுப்பினர்களின் கேள்வியை ஒதுக்கிவிட்டு சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
By : Thangavelu

இந்த உத்தரவை எதிர்த்து 12 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி 12 பாஜக எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்து வெளியிட்ட தீர்மானம் தன்னிச்சையாகவும், அரசியலமைப்பிற்கு எதிரானதாகும்.
எனவே அந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இடைநீக்கம் செய்வது வெளியேற்றத்தை விட மிகவும் மோசமானது ஆகும் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Source: Daily Thanthi
Image Courtesy:Yahoo Canada Style
Next Story