Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவியின் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உச்சநீதிமன்றம்! இப்போதாவது மாணவியின் பெற்றோரை ஸ்டாலின் சந்திப்பாரா?- அண்ணாமலை அதிரடி கேள்வி!

மாணவியின் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உச்சநீதிமன்றம்! இப்போதாவது மாணவியின் பெற்றோரை ஸ்டாலின் சந்திப்பாரா?-  அண்ணாமலை அதிரடி கேள்வி!

ThangaveluBy : Thangavelu

  |  14 Feb 2022 8:06 AM GMT

தஞ்சையில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி என்ற ஊரில் கிறிஸ்தவ பள்ளி இயங்கி வருகிறது. அங்கு படித்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவியை, விடுதி வார்டன் சகாயம்மேரி என்பவர் தொடர்ந்து மதமாற்றுவதற்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் மாணவி மதமாறுவதற்கு விருப்பம் இல்லை என்று தனது உயிரை விட்டார். இவரது மரணம் ஒட்டுமொத்த இந்துக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.



இந்த வழக்கை தமிழ்நாடு போலீசான சிபிசிஐடி விசாரித்து வந்ததை எதிர்த்து மாணவியின் பெற்றோர் தரப்பில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதமாற்றத்தால் உயிரிழந்த லாவண்யாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக எப்போதும் நியாயத்தின் பக்கம் உள்ளது. திமுக அரசு பொய்பிரசாரம் மேற்கொண்டதிற்கு மன்னிப்பு கேட்குமா? . இனிமேல் ஆவது உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News