இறந்தவர்கள் பற்றி பேசவது அநாகரீக அரசியல்.. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து.!
இறந்தவர்கள் பற்றி பேசவது அநாகரீக அரசியல்.. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து.!
![இறந்தவர்கள் பற்றி பேசவது அநாகரீக அரசியல்.. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து.! இறந்தவர்கள் பற்றி பேசவது அநாகரீக அரசியல்.. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/90bec2c5c06fb1303758da670fd5f038.jpg)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி திமுக எம்.பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசிய சம்பவத்துக்கு ஆளும் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி திகார் ஜெயில் வா வா என்று கூறுவதால் அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் 2ஜி வழக்கில் தான் சிக்கியிருப்பதை உணராத ராசா பொது வெளியில் அதிகமாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் எச்சரிக்கை செய்தனர்.
இந்நிலையில், இது குறித்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், வேளாண் சட்டங்கள் தவறானதை போன்று எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், இந்து கடவுளை சிலர் அவதூறாக பேசியதால் தான் வேல் யாத்திரை நடத்தப்பட்டது. எந்த மதத்தினரை பற்றி தவறாக பேசினாலும் பாஜக குரல் கொடுக்கும்.
மேலும், இறந்து போன தலைவர்களை பற்றி பேசுவது அநாகரீக அரசியல் என கருத்து தெரிவித்த அவர், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த டிச.31ம் தேதி அறிவிப்புக்கு பிறகு தான் கருத்து சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.