அஞ்சல்துறை தேர்வில் தமிழை மத்திய அரசு கட்டாயம் சேர்க்கும்.. பா.ஜ., தலைவர் விளக்கம்.!
அஞ்சல்துறை தேர்வில் தமிழை மத்திய அரசு கட்டாயம் சேர்க்கும்.. பா.ஜ., தலைவர் விளக்கம்.!
By : Kathir Webdesk
அதிமுகவிடம் தொகுதிகள் கேட்டு நெருக்கடி அளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதனால் அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. அதே சமயம் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகள் என்பனவற்றை தற்போது இருந்தே பேசத்தொடங்கியுள்ளது.
அதே போன்று அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. தற்போது அவர்கள் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் அதிகமான தொகுதிகளை கேட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த செய்திகளுக்கு தமிழக பாஜக தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில், தொகுதிகள் கேட்டு நாங்கள் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. மேலும், நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று தெளிவுபடுத்தி விட்டார். அவர் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் வரவேற்போம்.
அஞ்சல்துறை தேர்வில் தமிழை மத்திய அரசு கட்டாயம் சேர்க்கும், எனக் கூறினார்.