Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிட் லிஸ்ட்டில் 4 தி.மு.க அமைச்சர்கள் : அடித்து ஆடும் தமிழக பா.ஜ.க - ஒருத்தரும் இனி ஊழல் பண்ண முடியாது !

திமுக அமைச்சர்களைக் குறிவைக்கும் தமிழக பாஜக

ஹிட் லிஸ்ட்டில் 4 தி.மு.க அமைச்சர்கள் : அடித்து ஆடும் தமிழக பா.ஜ.க - ஒருத்தரும் இனி ஊழல் பண்ண முடியாது !
X

MuruganandhamBy : Muruganandham

  |  27 Oct 2021 10:18 AM IST

பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும்பாலானோர் திமுக ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் செய்யும் ஊழலை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகின்றனர்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்ற முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக பாஜக கட்சி நிர்வாகிகள் அம்பலப்படுத்த முயன்று வருகின்றனர். முன்பு பாஜகவை புறக்கணித்த இந்த அமைச்சர்கள் இப்போது அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்குத் தனியாரிடமிருந்து தீபாவளி இனிப்புகள் வாங்க திட்டமிடப்பட்டது குறித்து பாஜக அம்பலப்படுத்தியதன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. இப்போது அரசு நடத்தும் ஆவின் இனிப்புகளை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.

மின்சாரத் துறையில் மின்சாரம் மற்றும் நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்களை வெற்றிகரமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சசிகலா வருகை மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக அதிமுக சற்று பின்வாங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பிராதன எதிர்கட்சி செய்யக்கூடிய செயல்பாடுகள் அனைத்தையும் பாஜக மேற்கொண்டு வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு, சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ள தமிழக பாஜக திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளை நெருக்கமாகக் கண்காணித்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News