Begin typing your search above and press return to search.
டெல்டா விவசாயிகளை சந்திக்கும் தமிழக பா.ஜ.க., தலைவர்.!
டெல்டா விவசாயிகளை சந்திக்கும் தமிழக பா.ஜ.க., தலைவர்.!
![டெல்டா விவசாயிகளை சந்திக்கும் தமிழக பா.ஜ.க., தலைவர்.! டெல்டா விவசாயிகளை சந்திக்கும் தமிழக பா.ஜ.க., தலைவர்.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/d00c10cc209f510f6640c80fda7c7f19.jpg)
By :
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 3 வாரங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதே போன்று தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் விவசாயிகளை தூண்டிவிட்டு வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என பேசி வருகிறார்.
இது போன்றவர்களின் பேச்சுகள் அனைத்தும் பொய் என்பதை நிருபிக்கின்ற வகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்.
அதில் முதற்கட்டமாக டெல்டா விவசாயிகளை 3 நாட்கள் சந்தித்து வேளாண் சட்டம் குறித்து எடுத்துரைக்க உள்ளார்.
நாளை 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். நேரடியாக சென்று விவசாயிகளிடம் வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கி பேசுவார் என்று கூறப்படுகிறது.
Next Story