வருகின்ற 13ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.!
வருகின்ற 13ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.!
By : Kathir Webdesk
தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற 13ம் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
விரைவில் அதிமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் கடைசி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பட்ஜெட்டில் பல்வேறு வகையான சலுகைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அதிமுக அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது பற்றி ஆலோசனை நடைபெறுவதற்காக அமைச்சரவை கூட்டம் வருகின்ற சனிக்கிழமை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாதம் கடைசியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.