ராஜராஜ சோழன் காலத்துல தமிழ்நாடு கூடத்தான் கிடையாது - பி.எல்.சந்தோஷ் தரும் பதிலடி
'ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடு என்று ஒன்றே இல்லை' என பா.ஜ.க'வின் அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பதிலடி தரும் விதமாக பேசி உள்ளார்.

By : Mohan Raj
'ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடு என்று ஒன்றே இல்லை' என பா.ஜ.க'வின் அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பதிலடி தரும் விதமாக பேசி உள்ளார்.
ராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்ற பேச்சு சர்ச்சைக்கு சமீப காலமாக எழுந்து வரும் நிலையில் பா.ஜ.க'வின் அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, 'ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை எனக் கூறுகிறார்கள் ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடு என்று ஒன்றே கிடையாது. சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, பல்லவன் நாடு என்றுதான் இருந்தது. ராஜராஜன் ஆண்டபோது தமிழ்நாடு என ஒன்று இல்லாத போது அவர் எப்படி திராவிட மன்னனாக இருந்திருக்க முடியும். அவர் இந்து மன்னர் இல்லை என்றால் அவர் எப்படி பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியிருக்க முடியும்? ராஜராஜ சோழன் இந்துவா இல்லையான என்ற விவகாரத்தை முட்டாள்கள் முன்னெடுக்கிறார்கள்!' என கடுமையாக விமர்சித்தார்.
