வெற்றி நடை போடும் தமிழகம்.. முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்களின் பேராதவு.!
வெற்றி நடை போடும் தமிழகம்.. முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்களின் பேராதவு.!
By : Kathir Webdesk
வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாள் பிரச்சாரத்தை நேற்று நாமக்கல்லில் இருந்து தொடங்கியுள்ளார். நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் பிரச்சாரம் செய்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், சரோஜா உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் காலை வழிபாடு நடத்திய பின்னர் முதலமைச்சர் தொடர்ந்து லாரி மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உடன் சந்திப்பு நிகழ்த்தினார். தொடர்ந்து ராசிபுரத்தில் உள்ள அருந்ததியினர் காலனியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தினார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர்., காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, தற்போது என் காலத்திலும் சரி, என் ஆட்சி காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் அதனை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சூழ்ச்சி செய்து வருகிறார் என்றார். இதனை தொடர்ந்து வேனில் ஏறி பிரச்சாரத்தை துவங்கிய முதலமைச்சர் அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரிப்பில் ஈடுபட்டார்.
முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை. மக்களை தான் நான் முதலமைச்சராக பார்க்கிறேன் என கூறினார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட உள்ளது எனவும் இதனால் 443 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவக்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அது மட்டுமின்றி பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் விவேக் வீட்டில் தேனீர் அருந்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பரப்புரையில் சென்ற இடமெல்லாம் முதலமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். எப்பவும் இந்துக்கள் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தால் ஆரத்தி எடுப்பது வழக்கமாகும். சென்ற இடமெல்லாம் மக்களின் வாழ்த்து மழையில் நனைந்தார் என்றால் அது மிகையாகும்.
இன்றும் (30ம் தேதி) 2வது நாளாக வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.