Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டசபை தேர்தல்: அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு.?

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்புள்ளது என்று அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சட்டசபை தேர்தல்: அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு.?
X

ThangaveluBy : Thangavelu

  |  5 March 2021 12:17 PM IST

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்புள்ளது என்று அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் வெற்றி வாய்ப்பு மற்றும் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பன பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆட்சிமன்ற குழு கூட்டமும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியில் இன்று மாலைக்குள் வெளிவர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News