மற்ற கட்சிகளில் ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தை பிடித்துக் கொண்டிருக்கும்.. தி.மு.க.வை சாடும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவில் மிகப்பெரி பொறுப்பில் உள்ளனர். ஆனால் மற்ற கட்சிகளில் ஒரு தலைவர், ஒரு குடும்பம் மட்டுமே இருக்கும். ஆனால் பாஜக தனி மனிதக் கட்சி கிடையாது. அனைவருக்கும் சொந்தமானது. இங்கு வயது ஒன்றும் முக்கியமில்லை எனக் கூறினார்.

தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனிடையே பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற விதி உள்ளது. ஆட்சியில் இருந்தால் கட்சி பதவியில் நீடிக்கக்கூடாது, கட்சியில் இருந்தால் ஆட்சி பணி இல்லை என்ற விதியை அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், எல்.முருகன் வகித்து வந்த மாநில தலைவர் பதவி தற்போது துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை வருகின்ற 16ம் தேதி முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக கோவையில் இருந்து புறப்பட்டு திருச்சி சென்று மீண்டும் சென்னைக்கு செல்வதற்கான பயணங்களை வகுத்துள்ளது. அதன்படி இன்று கோவையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதனிடையே சாமி தரிசனம் முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, வருகின்ற 16ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
இதற்காக சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் சந்திக்கிறேன். பாஜக வளர்ச்சியடைய நல்ல முறையில் செயல்படுவேன். அனைவரின் கூட்டு முயற்சியால் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக வளரும்.
மேலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவில் மிகப்பெரி பொறுப்பில் உள்ளனர். ஆனால் மற்ற கட்சிகளில் ஒரு தலைவர், ஒரு குடும்பம் மட்டுமே இருக்கும். ஆனால் பாஜக தனி மனிதக் கட்சி கிடையாது. அனைவருக்கும் சொந்தமானது. இங்கு வயது ஒன்றும் முக்கியமில்லை எனக் கூறினார்.
திமுகவில் ஒரு குடும்பம் மட்டும் கட்சியிலும் ஆட்சியிலும் உள்ளது. மற்றவர்களுக்கு சிறிய அளவிலான பொறுப்பை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைவராகவும், அவரது மகன் உதயநதி ஸ்டாலின் இளைஞரணி தலைவராகவும் உள்ளார். மிக முக்கிய பதவிகளில் அவர்கள் குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.