Kathir News
Begin typing your search above and press return to search.

விடியல் தருகிறோம் என சொல்லி விலை ஏற்றத்தை மட்டும் தானே தர்றீங்க - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் ஆவின் இனிப்புகளின் விலை உயர்வுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனம்.

விடியல் தருகிறோம் என சொல்லி விலை ஏற்றத்தை மட்டும் தானே தர்றீங்க - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Sept 2022 8:20 AM IST

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது குறிப்பாக விலையேற்றும் முன்னிலையில் இருக்கிறது மக்களின் மேல் அக்கறை கொண்டவர்களின் போல நாடகமாடி திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கி விட்டது. மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பு ஆவின் பொருட்களின் விலையை ஏற்றி உள்ளார்கள்.


தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலை ரூ. 5 டீசல் விலை, ரூபாய் 4 குறைக்கப்படவில்லை. மாறாக வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் மின்கட்டண உயர்வு போன்ற பலவற்றில் விலைகளை உயர்த்தினார்கள். தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றில் செய்யுங்கள் என்று யாராவது கேள்வி கேட்டால், உதாசீனப் படுத்துகிறார்கள்.


கடந்த மார்ச் மாதம் ஆவின் பால் பொருட்களின் விலையை தி.மு.க அரசு உயர்த்தியது. தற்போது பேரதிர்ச்சியாக ஆவின் இனிப்பு வகைகளின் விளையும் உயர்த்தியுள்ளார்கள். தாங்கலாகவே அனைத்திற்கும் இடையே ஏற்றி வைத்துவிட்டு மத்திய அரசுதான் சொன்னது நாங்கள் செய்தோம் என்று பொய் பிரச்சாரம் தி.மு.க அரசு செய்து வருகிறது. தமிழக மக்கள் மீது திணிக்கும் இந்த விலையேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். விடியலை தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விலை ஏற்றத்தை மட்டுமே தந்துள்ளது என்று தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Oneindia News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News