பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டாம்: அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடிதம்!
தமிழக தொழிலாளர்களின் வாழ்வு சிறந்து விளங்க தீபாவளிக்கு மக்கள் பட்டாசு வெடித்து மகிழ இடையூறுகள் ஏற்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
By : Thangavelu
தமிழக தொழிலாளர்களின் வாழ்வு சிறந்து விளங்க தீபாவளிக்கு மக்கள் பட்டாசு வெடித்து மகிழ இடையூறுகள் ஏற்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டாசு உற்பத்தியிலும், 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டாசு வினியோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தொழில், தென் மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்தியாவில் 90 சதவீத பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றின் பாதிப்பில் மக்கள் துயருற்ற நிலையில் தன் நாட்டு மக்கள் இந்த சோர்விலிருந்து மீள ஐப்பான் நாடு பட்டாசு திருவிழாவை நடத்தி மக்களுக்கு உற்சாகம் அளித்தது. பட்டாசு வெடித்தல் என்பது தீபாவளி பண்டிகையின் ஒரு அங்கம்.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து தேசம் மீண்டெழும் நிலையில், மக்களை உற்சாகப்படுத்த தங்கள் மாநிலத்தில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar