இசைஞானியின் தனித்திறமையால் கிடைத்த பதவியை கொச்சைப்படுத்தாதீர்கள் - எதிர்க்கட்சிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள்
By : Thangavelu
பா.ஜ.க.வை பொறுத்தவரையில் எவ்விதமான தனிமனிதர்களையும் அடையாளப்படுத்தி வருகின்ற கட்சி கிடையாது. இங்கு தனிமனிதருக்கு வேலை கிடையாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு முன்னுரிமை எழுதியுள்ள இளையராஜா அந்த முன்னுரையில் அம்பேத்கரின் வாழ்வியல் சித்தாந்தங்களை நரேந்திர மோடி செய்து கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இளையராஜா கோவையில் தனது பிறந்தநாளின்போது மாநில அரசை பற்றி கூட பேசியிருந்தார். அதே போன்று பிரதமர் மோடியை பற்றி பேசினாலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். எனவே இதில் அரசியலை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்துள்ள ஒரு அங்கீகாரத்தைக் கூட இது போன்று கொச்சைப்படுத்த முயற்சி செய்கின்றனர். இதுவும் மிகவும் வேதனை அளிக்கிறது. எதிர்க்கட்சிகள் அவரை தேவையின்றி விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு அவரை வாழ்த்துங்கள். இதுவே எனது கருத்து. அவரை சாதி, மதத்திற்குள் அடக்கி விட முடியாது. அவர் எதற்குள்ளாகவும் அடங்காத ஒரு மாமனிதர் ஆவார்.
மேலும், பா.ஜ.க.வை பொறுத்தமட்டில் எந்த ஒரு தனிமனிதரையும் அடையாளப்படுத்தி வளரும் கட்சி கிடையது. இங்கு எப்போதும் தனி மனிதருக்கு வேலை கிடையாது. மக்களின் பேராதரவு பெற்றே பா.ஜ.க.வின் ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan