தமிழை காத்தவர் மோடி, மொழி பிரச்சனையை கிளப்பாதீர்கள் - அண்ணாமலை தாக்கு!
தி.மு.க மீது அதிருப்தி ஏற்படும் போது எல்லாம் மொழி பிரச்சனையை கிளப்புவார்கள் என்று தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தாக்கு.
By : Bharathi Latha
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழி போரை திணிக்காதீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாயமான பாடமாக அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவலை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் தமிழ் மொழி மீது இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. எப்போது எல்லாம் தி.மு.கவின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ?
அப்போதெல்லாம் ஊடகங்கள் கூட தி.மு.கவிற்கு எதிராக பேச தொடங்குகின்ற போது அப்போதெல்லாம் திராவிடம் மொழி பிரச்சனைகளை எழுப்புகிறது. தமிழ் மொழி தன்னைத்தானே காத்துக் கொள்ளும். கவலைப்பட வேண்டாம். காலத்தால் அழிக்க முடியாதது தமிழ் மொழி. தி.மு.கவை மட்டும் நம்பி இருந்ததாக நினைக்க வேண்டாம்.
தமிழை காத்தவர் நரேந்திர மோடி! தமிழை கட்டாயப் பாடமாக்கி பயிற்று மொழியாக்கியவர் நரேந்திர மோடி. தமிழக மக்களை நீங்கள் தவறாக எடை போட வேண்டாம். மக்களுக்கு தெளிவாக தெரியும். தமிழில் அரசியலுக்காக யார் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியில் உண்மையில் யார்? காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்று தன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
Input & Image courtesy: Oneindia News