மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: திருப்பதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி.!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக, பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறினார்.
By : Thangavelu
அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், தெலுங்குதேசம், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகிறது.
இதனிடையே திருப்பதியில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற சூழ்நிலையில், பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 300 பேர் திருப்பதியில் முகாமிட்டுள்ளனர்.
அவர் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக எல்.முருகன் பரப்புரை செய்வதற்கு முன்பாக செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக தேர்தல் நிலவரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக, பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறினார்.