Kathir News
Begin typing your search above and press return to search.

ஆளுங்கட்சிக்கு காட்டிய எஜமான விசுவாசத்தில் போலீசாரை மிஞ்சிவிட்டது மாநில தேர்தல் ஆணையம் !- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

தமிழக உள்ளாட்சி தேர்தலை பார்க்கும்போது, மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு காட்டிய எஜமான விசுவாசம் போலீசாரையே மிஞ்சிவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாலை கூறியுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு காட்டிய எஜமான விசுவாசத்தில் போலீசாரை மிஞ்சிவிட்டது மாநில தேர்தல் ஆணையம் !- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 Oct 2021 9:17 AM IST

தமிழக உள்ளாட்சி தேர்தலை பார்க்கும்போது, மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு காட்டிய எஜமான விசுவாசம் போலீசாரையே மிஞ்சிவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாலை கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, தேர்தல் நாடகத்தின் இறுதி காட்சி உறுதி செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற மாற்று கட்சிகளின் வெற்றி வேட்பாளர்களை கண்டறிந்து, அவர்களின் வேட்பு மனுக்களை காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம் மிக கேவலம். தேர்தல் ஆணையம் திமுகவின் வெற்றிக்கான முன்னுரையை வேட்புமனு தாக்கல் தொடக்கத்திலேயே எழுத தொடங்கிவிட்டது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் மிக விசுவாசியாக நடந்து கொள்வதில், தமிழக காவல் துறை போட்டியின்றி முதலிடத்தில் இருந்தது. தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலை பார்க்கின்றபோது தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியினருக்கு காட்டிய எஜமான விசுவாசம் காவல் துறையையே மிஞ்சிவிட்டது.


தேர்தல் ஆணையமும், காவல் துறையும் கைகோர்த்து கொண்டு, ஆளுங்கட்சி வெற்றிக்கு அரும்பாடுபட்ட அவலத்தை தமிழக மக்கள் முகம் சுளித்து பார்த்து கொண்டிருந்தனர். தோழமை அதிமுக நிர்வாகிகளும், பாஜ நிர்வாகிகளும் பரவலாக அனைத்து தொகுதிகளிலும் காரணங்கள் ஏதுமின்றி, கைது செய்யப்பட்டனர். ஓட்டு எண்ணும் மையங்களில் வெளிப்படையான தன்மை கடைபிடிக்கப்படவில்லை. சில இடங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களையும் தோல்வியுற்றவர்களாக அறிவித்த கொடுமையும் நடந்தது. கடிமான சூழலில் கடமை தவறாமல் பணியாற்றிய பாஜக தோழமை கட்சியின் தொண்டர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Bjp Tn President Annamalai Statement

Next Story
கதிர் தொகுப்பு
Trending News