Kathir News
Begin typing your search above and press return to search.

அன்னையின் பரிவோடு வழங்கும் 'அம்மா' உணவகத்தை அறிவாலயம் மூடலாமா: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

கடந்த அதிமுக ஆட்சியின்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை தமிழகம் முழுவதும் தொடங்கினார்.

அன்னையின் பரிவோடு வழங்கும் அம்மா உணவகத்தை அறிவாலயம் மூடலாமா: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  2 Nov 2021 11:02 AM GMT

கடந்த அதிமுக ஆட்சியின்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை தமிழகம் முழுவதும் தொடங்கினார். இதன் பின்னர் அவர் மறைந்த பின்னரும் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அம்மா உணவகங்கள் தங்கு தடையின்றி குறைந்த ரூபாயில் உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் லட்சக்கணக்கான ஏழைகள் தினமும் அம்மா உணவகங்களிலேயே சாப்பிடத் தொடங்கினர். இதற்கு தேவையான அனைத்து பணத்தையும் தமிழக அரசே ஒதுக்கியது. மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 700 அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இதனிடையே திமுக ஆட்சியில் அமர்ந்த பின்னர் முறையாக அம்மா உணவகங்களுக்கு நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பல்வேறு அம்மா உணவகங்களில் இரவு உணவுகள் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை பார்த்தால் அம்மா உணவகங்களை மூடுவதற்கான அறிகுறிகள் போன்று இருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தது.


இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஏழைகள் பசியாற எளிதாய் உணவளித்து, அன்னையின் பரிவோடு, அவசிய உணவளித்த, அம்மா உணவகத்தை அறிவாலயம் மூடலாமா? மக்கள் பயன்படுத்தும் மகத்தான திட்டத்தை, மாற்றுக்கட்சி தொடங்கியதால், மறுக்கலாமா? விருந்தோம்பல் நம் மரபல்லவா? ஏழைகள் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகத்தை எதிர்க்காமல் தொடரவும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Bjp Presedient Annamalai Twiter

Image Courtesy:Asiannet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News