பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து பாஜ.க. சார்பில் மாட்டு வண்டி போராட்டம்!
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து பாஜக விவசாய அணி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் மாட்டு வண்டியில் சென்று போராட்டம் நடத்த உள்ளனர்.
By : Thangavelu
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து பாஜக விவசாய அணி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் மாட்டு வண்டியில் சென்று போராட்டம் நடத்த உள்ளனர்.
கடந்த 3ம் தேதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான காலல் வரியை குறைத்து அதிரடியாக உத்தரவிட்டது. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைந்தது. இதற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இதே போன்று பின்பற்றி பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது. இதனால் அங்கும் பெட்ரோல், டீசலுக்கு சுமார் 17 ரூபாய் வரைக்கும் குறைந்தது.
மற்ற மாநிலங்களை போன்று தமிழக அரசு குறைக்கவில்லை. மத்திய அரசு குறைத்த விலை மட்டுமே குறைந்துள்ளது. திமுக அரசு குறைக்காததால் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் தக்காளி, காய்கறிகள் விலை உச்சத்திற்கு சென்றுவிட்டது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை திமுக அரசு குறைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார். அதன்படி அக்கட்சியின் மகளிரணி சார்பில் கடந்த 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றது. அதே போன்று இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் விவசாய அணி சார்பில் மாட்டு வண்டியில் சென்று தங்களின் கண்டனங்களை பதிவு செய்கின்றனர். அதே போன்று நாளை சிறுபான்மையினர், வழக்கறிஞர் பிரிவுகள் சார்பாகவும் போராட்டங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar
Image Courtesy:DT Next