சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் எங்கே? - ஏமாற்றிய தி.மு.க !
DMK Cheated People TN People.
By : Mohan Raj
இன்றைய தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தி.மு.க'வின் பல தேர்தல் வாக்குறுதிகள் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை முக்கியமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் திட்டம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த தி.மு.க வெற்றி பெற்றது. வெற்றி பெற்றபின் வெளியிடும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். இப்படியான சூழலில் இதுவரை மிக சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி வந்த தி.மு.க இந்த நிதிநிலை அறிக்கையில் பல முக்கியமான குறிப்பாக 100 ரூபாய் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை போன்ற அறிவிப்புகள்.
காரணம் இந்த மாதிரியான அறிவிப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் இது நேரடியாக பயனாளர்களுக்கு பலனளிப்பது மட்டுமின்றி தி.மு.க'வின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்கியதும் இது போன்ற அறிவிப்புகளே. ஆனால் இது எப்போதும் செயல்படுத்தப்படும் என்பது குறித்தோ, அல்லது இவை நடைமுறைக்கு எப்போது வரும் என்பது குறித்தோ ஏதுவும் நிதியமைச்சர் கூறவில்லை என்பது வாக்களித்த மக்களுக்கே ஏமாற்றம் தான்.