'அசிங்கப்படுத்திட்டான் குமாரு'.. தி.மு.க.வின் அவமதிப்பால் விம்மி.. விம்மி.. அழுத காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. விரைவில் தேமுதிகவும் சேர்ந்து விடும் என்றே கூறப்படுகிறது.
By : Thangavelu
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. விரைவில் தேமுதிகவும் சேர்ந்து விடும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் திமுகவில் இந்த நிமிடம் வரையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உரிய மரியாதை தராமல் கூட்டணியை உதாசணப்படுத்தி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியை முதற்கட்ட பேச்சுவார்த்தைக்காக அழைத்து அவமானப்படுத்தியதாக சில தகவல்கள் கூறுகின்றன.
கூட்டணி பேசும்போது தன்னை திமுக தலைமை அவமதித்து விட்டதாக கே.எஸ்.அழகிரி விம்மி, விம்மி அழுதுள்ளார் என்று பத்திரிகையாளர் சபீர் அகமது தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.