சட்டமன்ற தேர்தல் எதிரொலி.. மது விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு.!
தினமும் தொண்டர்கள் பாட்டில், கையுமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. இதனால் தினமும் விற்பனை செய்யப்படுவதை விட கூடுதலாக மதுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், மது விற்பனையும் முன்பை விட தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி (ஏப்ரல்) மாதம் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் மது விற்பனையும் ஜோராக அதிகரித்து வருகிறது.
தினமும் தொண்டர்கள் பாட்டில், கையுமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. இதனால் தினமும் விற்பனை செய்யப்படுவதை விட கூடுதலாக மதுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு தொண்டரின் கைகளில் 5 அல்லது 10 பாட்டில்கள் இருக்கிறது. இதனால் மது விற்பனைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது ஒரு நபருக்கு 4 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.