தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை.!
தேர்தல் அன்று தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி நடைபெறும் அன்று தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனிடையே தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிடத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அன்று தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும். இதைத் தனியார் நிறுவனங்கள் பின்பற்றாதது தொடர்பாக சேலத்தை சேர்ந்த அகமது ஷாஜகான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கும் உரிமை குறித்துத் தனியார் நிறுவன ஊழியர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிடவும் உத்தரவிட்டார்.