Kathir News
Begin typing your search above and press return to search.

காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு.. தமிழக தேர்தல் அதிகாரி தகவல்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி (ஏப்ரல்) நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களை கட்டத்தொடங்கியுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு.. தமிழக தேர்தல் அதிகாரி தகவல்.!

ThangaveluBy : Thangavelu

  |  23 March 2021 4:06 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி (ஏப்ரல்) நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களை கட்டத்தொடங்கியுள்ளது.

இதனிடையே தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்துள்ள பேட்டியில்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஆயிரத்து 727 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.




அதில் 4 ஆயிரத்து 512 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. (நேற்று 6.30 மணி நிலவரப்படி 215 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன). தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர், பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர். 7 ஆயிரத்து 192 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

இதனிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.




மேலும், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நீடிக்கும். எனவே வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்கலாம். இவ்வாறு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News