"தமிழ்நாட்டுல ஆட்சியை கலைச்சுடுவீங்களோ?" - ஆளுநர் நியமனத்திற்கு அலறும் திருமா !
Breaking News.
By : Mohan Raj
"தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க கூடிய அளவிற்கு தெம்பும், திராணியும் அவர்களுக்கு கிடையாது" என புதிய ஆளுநர் நியமனத்திற்கு சம்மந்தம் இல்லாமல் பயந்து குரல் கொடுத்துள்ளார் திருமாவளவன்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் முழுக்க முழுக்க காவல்துறையை பின்புலமாகக் கொண்டவரும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தின் ஆளுநராக இருந்தவருமான ஆர். என் ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த திருமாவளவன் கூறியதாவது, "தமிழகத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பவர் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுந்திருக்கிறது என தெரிவித்த அவர், உளவுத்துறையுடன் உறவு வைத்துள்ள ஒருவரை வேண்டுமென்றே தமிழக ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது என குற்றம் சாட்டினார். ஆளுநர் என்பவர் ஜனநாயகப் பூர்வமாக செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒருவரைதான் நியமிக்க வேண்டும் என்றார். மொத்தத்தில் தமிழகத்திற்கு யாரை ஆளுநராக கொண்டுவந்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க கூடிய அளவிற்கு தெம்பும், திராணியும் அவர்களுக்கு கிடையாது" எனவும் அவர் கூறினார்.