தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேச்சு!
எதிர்க்கட்சியான திமுக குடும்ப அரசியலையை முக்கியமாக கருதுகின்றது. தங்களின் வாரிசுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கிறது.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: கவிமணி, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேஷமணி உள்ளிட்டோரை நினைவு கூர்கிறேன்.
வளர்ச்சி என்ற மந்திரத்தை முன்வைத்து மக்களை எதிர் கொண்டு வருகிறோம். என்றுமே மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடும். தமிழகத்தில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குமரி,மும்பை இடையே பொருளாதார வழித்தடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான திமுக குடும்ப அரசியலையை முக்கியமாக கருதுகின்றது. தங்களின் வாரிசுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கிறது. மக்களுடைய நலன்கள் குறித்து கவலைப்படுவதில்லை. திமுகவில் கருணாநிதி உடன் இருந்து பணியாற்றிய மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்து வருகிறது. அது மட்டுமின்ற மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு அதிகமான கவனம் செலுத்தி வருகிறது.
வருகின்ற தேர்தலில் அதிமுக, பாஜக வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டும் எனவும், அதே சமயத்தில் எதிர்க்கட்சியான திமுகவிற்கு சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
