தமிழக நர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தை அமாவாசையில் களைக்கட்டிய வேட்புமனு தாக்கல்!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரையில் 1,468 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
By : Thangavelu
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரையில் 1,468 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று அனைத்திற்கும் ஒரே கட்டமாக வருகின்ற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த மாதம் ஜனவரி 28ம் தேதி முதல் தொடங்கியது. பிப்ரவரி 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளாகும். அதே போன்று பிப்ரவரி 5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. பிப்ரவரி 7ம் தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாளாகும்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று தை அமாவாசை நல்ல நாள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் களை கட்டியது. மாநிலம் முழுவதும் பலர் கோயிலுக்கு சென்றுவிட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1,468 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Source: News 7 Tamil
Image Courtesy: DT Next