தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்.. மத்திய உள்துறை அமித் ஷா.!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது:
மம்தாவின் தவறான ஆட்சியால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மாற்றத்தை விரும்புகின்றனர். மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா பேசினார். அது மட்டுமின்றி அசாமில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் தெரிவித்த அமித் ஷா, தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வரஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.