Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகம் சொர்க்கபூமியாக திகழ அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்: டாக்டர் ராமதாஸ்.!

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலிலும் இடம் பிடித்து சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறார்.

தமிழகம் சொர்க்கபூமியாக திகழ அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்: டாக்டர் ராமதாஸ்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  27 March 2021 5:46 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அது போன்று சென்னை, கும்மிடிப்பூண்டி தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார்.





கும்மிடிப்பூண்டி தொகுதியில் பாமக வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் தண்டலம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: நார்வே, சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் கல்வி, மருத்துவத்தில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அது மட்டுமின்றி மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலிலும் இடம் பிடித்து சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறார்.





எனவே, அதே போன்று நிலைமை தமிழகத்தில் இருக்க வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும். அதற்கு நீங்கள் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News