சட்டசபை தேர்தல் பிரச்சாரம்.. 30ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதனிடையே தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அதிமுக, கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக வருகின்ற 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
இதனிடையே அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். அதே போன்று ஏப்ரல் 2ம் தேதி மதுரை, நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்.
அதற்கு முன்னர் 26ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் வருகையால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.